செயற்கை நுண்ணறிவு ஆபத்தா
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அனைவராலும் கருதப்படுவது இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அதாவது artificial intelligence மனித எதிர்காலத்தையே புரட்டிபோடும் இந்த செயற்கை நுண்ணறிவு பற்றி இந்த பதிவில் காண்போம்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?(What is artificial intelligence?)
இந்த செயற்கை நுண்ணறிவு என்பது யாதெனில் முன்பெல்லாம் ஒரு இயந்திரத்திற்கு தன்னிச்சையாக செயல்பட தெரியாது நாம் ஒரு பட்டனை தட்டினால் அதற்கு ஏற்றார் போல் இயங்கும் ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு என்பது நிரலாக்க மொழிகளை (PROGRAMMING LANGUAGE) பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்பட்டு சுயமாக முடிவெடுக்க கூடியதாக இருக்கும் , இதற்கு சிறந்த எடுத்துகாட்டு உலகின் மிகப்பெரிய பணக்கார்களில் ஒருவரான டெஸ்லா கார்கள் நாம் முன்பெல்லாம் கார் ஓட்ட steering, brake , clutch, gear போன்றவற்றை பயன்படுத்துவோம் ஆனால் இந்த டெஸ்லா கார்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடியது தேவைக்கேற்ப வேகத்தை மாற்றும் காரை நிறுத்தும், காரை திருப்பும் இதற்கு நாம் எந்த வித உள்ளீடுகளையும் கொடுக்க தேவையில்லை இதைதான் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. ஒரு விடயத்தை மனிதனைபோல் புரிந்துகொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனை பெற்றதுதான் இந்த ARTIFICIAL INTELLIGENCE ஆகும்.
ARTTIFICIAL INTELLIGECE உருவாக்கம்
2000-ஆம் ஆண்டில் தான் இந்த செயற்கை நுண்ணறிவு என்பது அதிகளவில் பேசப்படுகிறது இண்டர்நெட்டின் அபாரமான வளர்ச்சி காரணமாக இந்த செயற்கை நுண்ணறிவை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்தோம். செயற்கை நுண்ணறிவு என்பது ஹாலிவுட் படங்களில் வரும் ரோபோக்கள் மட்டுமல்ல இன்று நாம் பயன்படுத்தகூடிய GOOGLE,YOUTUBE,FACEBOOK- போன்ற இண்டர்நெட்டை மையமாக கொண்டு செயல்படக்கூடிய அனைத்து தளங்களும் இந்த செயற்கை நுண்ணறிவின் செயல்பாட்டில்தான் இயங்குகிறது நீங்கள் யூடிபில் சமையல் பற்றிய வீடியோக்களை பார்த்தால் உங்களுக்கு சமையல் சம்மந்தமான விளம்பரங்கள் காட்டப்படும் இப்படி உங்களுக்கு என்ன விருப்பம் எது தேவை என்பது வரை உங்களுடைய போனில் உள்ள செயலிகளுக்கு தெரியும்.
செயற்கை நுண்ணறிவு ஆபத்தா
இந்த செயற்கை நுண்ணறிவு இப்படி தன்னிச்சையாக செயல்படும் திறன்பெற்றதால் ஒரு கட்டத்தில் மனிதர்களின் மூளையை விட அதிக திறனை பெற்று மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பிரபல அறிவியல் ஆய்வாளரான ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் கூறுகிறார்கள். ஆனால் தற்போது வரை இந்த செயற்கை நுண்ணறிவு மூலமாகதான் மருத்துவ துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அதுமட்டுமின்றி காலநிலைகளை துல்லியாமக கணிக்கவும் எதிர்காலத்தில் காலநிலை எவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாக கூறவும் இந்த செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.
அறிஞர்கள் கூறியது போல் எப்பொழுது இந்த ரோபோக்கள் மனிதனுக்கு கட்டுபடாமல் தன்னிச்சையாக யோசித்து செயல்படுகிறதோ அப்பொழுது இது மிகப்பெரிய ஆபாத்தாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி இந்த செயற்கை நுண்ணறிவின் வருகையால் பல கோடி மக்கள் வேலையை இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது மனிதனை விட இந்த தொழில்நுட்பம் சிறப்பாகவும் வேகமாகவும் செயல்படுவதால் பெரும்பாலான முதலாளிகள் இதைதான் பயன்படுத்த நினைப்பார்கள். இதனால் வேலையின்மை அதிகரிக்கும் எப்படி இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
நன்றி!