mystery events

உலகின் பத்து மர்மமான நிகழ்வுகள் top 10 mystery events in tamil

                              உலகின் பத்து மர்மமான நிகழ்வுகள்-mystery events

mystery events tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் உலகில் நடந்த ஒரு பத்து மர்மமான நிகழ்வுகளை(mystery events) பற்றி காண்போம்.

1.மாயமான பிரதமர்

harold halt

1966-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஹரால்டு ஹால்டு என்பவர்  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா கடற்கரையில் குளிக்க சென்றபோது மாயமானர். இன்றுவரை இவருக்கு என்ன ஆனது எப்படி இவர் மறைந்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இன்றுவரை இவரின் உடலும் கிடைக்கவில்லை.

2.மர்ம மேகம்

mystery clouds

2015-ஆம் ஆண்டு சிவிஸர்லாந்தில் உள்ள ரிக்வார்டு என்ற கிராமத்தில் மேகங்கள் மலைபகுதியில் இருந்து கீழே இறங்கியுள்ளது இதனை கண்ட பொதுமக்கள் பயந்துள்ளனர். ஆனால் கீழே வந்த மேகம் சற்று நேரத்தில் மேலே சென்றுவிட்டது இந்த மேகம் எப்படி கீழே வந்தது இதற்கான காரணம் என்ன என்பதை இன்றுவரை ஆய்வாளர்களால் தெளிவாக கூறவில்லை.

3.மர்ம கத்தி

mystery knife

மேலே படத்தில் காணும்  கத்தி 1922-ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள எகிப்தோமேனியா என்ற கல்லறையை எடுத்தபோது அதில் இருந்த கத்திதான் இது. இந்த கத்தி பூமியில் இல்லாத ஒரு உலோகத்தில் இருந்து உருவாக்கபட்டுள்ளது என கண்டறிந்தனர். பண்டையகால எகிப்தியர்கள் பூமியில் வந்து விழுந்த எறிகல்லில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இரும்பே பயன்படுத்தாத காலத்தில் எப்படி இவ்வளவு கடினமான உலோகத்தை எகிப்தியர் பயன்படுத்தினர் என்பது பிரியாத பிதிராகவே உள்ளது.

4.மர்ம சத்தம்

mystery sound

2018-ஆம் ஆண்டு கொலம்பியாவில் வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டுள்ளது இதை கேட்ட மக்கள் இது வானத்தில் இருந்து வந்திருக்கலாம் என கூறுகிறார்கள். ஆனால் இதனை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இது மேகத்தில் இருந்து வரவில்லை என்றும் இது சத்தம் வர வேறொரு காரணம் இருக்கலாம் என கூறுகிறார்கள் ஆனால் ஒரு தெளிவான விளக்கத்தை எவராலும் கூற முடியவில்லை.

5.மர்ம டிவி ஷோ

1987-ஆம் ஆண்டு சிகாகோவில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் ஒரு மர்ம நபர் முகமூடி அணிந்து பேசுவதுபோல் ஒரு வீடியோ வெளியானது. இது பற்றி தொலைக்காட்சி நிறுவனம் கூறுகையில் அவர்களுடைய சேனலை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் அவர்கள் ஏன் இதை செய்தார்கள் எதற்காக செயுதார்கள் என்றும் தெரியவில்லை என கூறினர். உண்மையில் முகமூடி அணிந்த நபர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை.

6.மர்மபெண்

1963-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான ஜான் கென்னடியை சுட்டு கொண்ற போது புகைப்படத்தில் இருந்த பெண்தான் இவர் . துப்பாக்கி சூடு நடத்தியபோது அணைவரும் பயந்து ஓடியபோது இந்த பெண் பயமே இல்லாமல் புகைப்படம் எடுத்தபடியே நின்றுள்ளார். அத்பிறகு போலிசார் விசாரிக்கையில் இந்த பெண் யார் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லையாம். இவர் யார் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

7.நடனமாடும் மர்ம நோய்

dancing plague

1518-ல் பிரான்சு நாட்டில் உள்ள தெருவில் ஒரு மர்ம பெண் நடனமாட தொடங்குகிறார் கிட்ட தட்ட 4 நாட்கள் இடைவிடாமல் நனமாடுகிறார் இதனை கண்ட மக்களும் அவருடன் நடனமாட தொடங்குகின்றனர் இப்படியே பல நூறு மக்கள் தாங்கள் எதற்கு நடனமாடுகிறோம் என்று தெரியாமலேயே நடனமாடி மாரடைப்பாலும் உடல்நல குறைபாட்டாலும் அவர்கள் நடனமாடிய இடத்திலேயே இறந்துபோகின்றனர். இப்படி பல நூறு மக்கள் நடனமாடியே இறந்துபோகின்றனர். இதை அன்றைய காலத்தில் டான்சிங் பிளேக் என கூறியுள்ளார்கள்.ஆனால் இதில் குறிப்பிடதக்க விஷயமு என்னவென்றால் முதலில் நடனமாடிய பெண் இறக்கவில்லை. இவர் ஏன் வந்து அங்கு நடனமாடினார் அதை கண்ட மக்கள் ஏன் நடனமாடி தங்கள் உயிரை விட்டனர் என்பதும் மர்மமாகவே உள்ளது.

8.மைக்டைசன் மர்ம வீடியோ

mike tyson
  1995-ஆண்டு மைக் டைசனுக்கும்  மெக்னீலிக்கும் இடையே நடந்த குத்துசண்டை போட்டியில் ஒரு மர்ம நபர் ஆப்பிள் ஐ போனை கையில் வைத்தபடி போட்டோ எடுக்கும் காட்சி இருக்கும். உண்மையில் ஐ போன்கள் 2000 ஆண்டுக்கு பிறகே அறிமுகம் செய்யபட்டன. அப்படியென்றால் அந்த வீடியோவில் இருக்கும் நபர் எப்படி இந்த போனை வைத்திருக்க முடியும். இதை நிறையபேர் போட்டோ எடுக்கும் அந்த நபர் காலப்பயணம் செய்து 1995-ஆம் ஆண்டுக்கு சென்றிருக்கலாம் என நம்புகிறார்கள். உண்மையில் அவர் யார் அவர் கையில் இருப்பது ஐ போன் தானா எனபது எவருக்கும் தெரியாது.

9.பறவைகளின் மர்ம இறப்பு

பறவை

2011-ஆம் ஆண்டு அமெரிக்காவின் புத்தாண்டு தினத்தில் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான பறவைகள் கீழே விழுந்து இறந்தன அதேபோல் இந்த பறவைகள் இறந்த இடத்தில் இருந்து சுமார் 125-மைல் தொலைவில் உள்ள ஒரு ஏரியில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து கரைஒதுங்கின. இதற்கு மர்ம காய்ச்சலா என ஆராய்ந்த பொழுது அதுவும் இல்லை என கண்டறிந்தனர். இதேபோல் ஒரு வருடம் கழித்து 2012 ஆம் ஆண்டு புத்தாண்டில் இதேபோல்ஆயிலக்கணக்கான பறவைகள் இறந்தன இதேபோல் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளது. இந்த பறவைகள் ஏன் கொத்து கொத்தாக இறக்கின்றனர் என்பது இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

10.மர்ம கடல் அலைகள்

ocean

இந்த கடல் அலைகள் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக சதுர வடிவில் இருக்கும் இதற்கு காரணம் எதிர் பக்கத்திலிருந்தும் வரும் அலைகள் என குறிப்பிட படுகிறது. இவை மிகவும் ஆபத்து என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுவும் உலகில் இருக்கூடிய மர்மமான வித்தியாசமான நிகழ்வு .

 
                                                                         நன்றி!