வணக்கம்! இன்றைய பதிவில் நம் நாட்டில் இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பாலியல் வன்கொடுமைகள் எனலாம் அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் என்று நாம் கூறலாம். இந்த கற்பழிப்புகளில் ஆண்கள் ஈடுபட காரணம்தான் என்ன இதை எப்படி கட்டுபடுத்தலாம் என்று ஒரு சில வழிமுறைகளை காண்போம்.
மது போதைக்கு அடிமையானவர்கள்
இந்த கொடிய செயல்களில் ஈடுபடுவர்கள் பெரும்பாலானோர் மது மற்றும் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. எனவே நீங்கள் ஆணாக இருந்தால் போதைக்கு அடிமையாகமால் இருப்பது மிக அவசியம் .
உணர்வுகளை கட்டுபடுத்தாமை
தற்போது உள்ள உலகில் பெரும்பாலானோர் தனது உணர்வுகளை கட்டுபடுத்த தவறுகின்றனர் . அது கோபமாக இருக்கட்டும் மகிழ்ச்சி , அனைத்தும் அடங்கும். அனைத்தையும் முறையாக கையாள கற்றுகொள்ளுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்த முதலில் உங்களுக்கு மனதை கட்டுபடுத்த தெரிந்திருக்க வேண்டும் அதற்கு தியானம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பாலியல் கல்வி
பெரும்பாலும் நமது சமுதாயத்தில் பாலியல் பற்றிய கருத்துகள் மற்றும் சிந்தனைகள் தவறாகவே சித்தரிக்கபடுகின்றன இதனால் கல்வி நிலையங்களும் இதனை மாணவர்களுக்கு கற்பிக்க மறுக்கின்றன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு இந்த பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே பாதி குற்றங்கள் நீங்கும்.
பெற்றோர்களின் கவனமின்மை
இன்றைய சூழலில் ஒரு குடிம்பத்தை நடத்த கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல கட்டாயமாக உள்ளது . இதனால் பெரிதும் பாதிக்கப்டுவது பிள்ளைகளே பெற்றொர்களின் சரியான பராமரிப்பு இல்லாததும், பிள்ளைகளை பெற்றோர்கள் கவனிக்கமால் இருப்பதும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனலாம்.
மன அழுத்தம்
இந்த கொடூர செயல்களில் ஈடுபவர்கள் தன்னுடைய சமூகத்தால் குடும்பத்தால் அல்லது தனி நபரால் அதிக மன அழுத்ததிற்கு உள்ளாக்கபடுகிறார் என்றும் அவர்கள் அந்த செயல்களில் ஈடுபட இதுவும் ஒரு காரணமாகவே உள்ளது.
தொடர்புடையவை: மன அழுத்தத்தை நீக்கும் வழிமுறைகள்
சமூகம் மற்றும் கலாச்சாரம்
இந்த சமூகம் மற்றும் கலாச்சாரம் என்பது இடத்திற்கு இடம் மனிதருக்கு மனிதர் மாறுபடகூடியது இது ஒவ்வொரு தனி நபரின் வாழ்க்கையுடனும் தொடர்பில் இருப்பதால் நம் சமூகத்தில் ஏற்படும் ஒரு சில மாற்றங்கள் கூட இந்த மாதிரியான செயல்களுக்கு வித்திடும்.
source: the hindu