குழந்தைகளுக்கு வயிற்று வலி வருவது
மிகவும் சாதாரண விஷயம் தான்,
குழந்தைகளுக்கு வயிற்று வலி
வர பல காரணங்கள் உள்ளது இருப்பினும் அந்த காரணங்களை தெரிந்த கொண்டாலே போதும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.
குழந்தைக்கு வயிற்று வலி வர காரணங்கள்:-
குழந்தைக்கு வயிற்று வலி வர கீழ்
கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் மிக முக்கிய காரணங்கள் ஆகும்.
வாயுத் தொல்லை, தாய்ப்பால் தருவதில்
ஏதேனும் பிரச்சனை, குழந்தைக்கு உணவு
தருவதில் ஏதேனும் பிரச்சனை, அதேபோல்
குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை ஊட்டிவிடுவது காலிஃப்ளவர், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்களை அதிகமாக உண்ணுதல், பாலில் உள்ள லாக்டோஸ் உடலில் அதிகமாவது, சீரற்ற செரிமான இயக்கம்,குழந்தைக்கு மலச்சிக்கல், அதேபோல் குழந்தை மலம் கழிக்காமல் சிரமபடுதல், குழந்தையின் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது ஆகியன குழந்தைகளுக்கு வயிற்று வலி வர மிகவும் முக்கிய காரணங்கள் ஆகும்.
பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
இறால், கருவாடு, சீஸ், வெண்ணெய், காபி, டீ, சிட்ரிஸ் பழங்கள், அதிக மசாலா சேர்த்த சைவ மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும், அதேபோல் தக்காளி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி அதிகமாக உண்ண கூடாது. மேலும் பீன்ஸ், சிக்கன், நட்ஸ் மற்றும் முட்டை ஆகியவற்றை அதிகளவு சாப்பிட கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் சாக்லேட், கேக், பீசா போன்ற உணவுகளையும் தவிர்த்து கொள்ள
வேண்டியது மிகவும் நல்லது.
குழந்தைக்கு வயிற்று வலி குறைய – பூண்டு:-
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சாப்பிடும் வேண்டும். இவ்வாறு உணவில் பூண்டு அதிகம் உணவில் அதிகளவு பூண்டு சேர்த்து கொள்ள சேர்த்து கொள்வதினால் தாய்ப்பால் வழியாக
பூண்டு சத்து குழந்தைக்கு சேர்வதால்
குழந்தையின் வயிற்று வலி குணமாகும்.
குழந்தை வயிற்று வலி மருத்துவம் – இளஞ்சூடான ஓத்திடம்:
குழந்தையின் வயிற்று வலி குறைய குழந்தையின் வயிற்றில் இளஞ்சூடான ஒத்தடத்தை 3 முதல் 4 நிமிடங்கள் கொடுப்பதினால், குழந்தையின் வயிற்றில் இரத்த ஓட்டம் நன்கு சுரக்கும். இதனால் குழந்தையின் வயிற்று வலி குணமாகும்.
குழந்தைக்கு மசாஜ் செயுங்கள்:-
குழந்தையை சமமான
தளத்தில படுக்க வைத்து குழந்தையின்
வயிற்றில் தேங்காய்
எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள்.
தொப்புள் சுற்றி எண்ணெயைத் தடவுங்கள்.
இதனால் செரிமானம் சீராகும். வாயு நீங்கும்.
குழந்தையின் வயிற்று வழியும் சரியாகிவிடும்.