random facts

நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான பத்து தகவல்கள் top 10 amazing facts in tamil

  top 10 amazing facts

 

 

 

 

top 10 amazing facts in tamil

வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் ந நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றிதான் பார்க்க போகிறீர்கள்.

1. நாக்கின் சிறப்பம்சம்

நம் உடலில் உள்ள மிகவும் வலிமையான தசைபகுதி நமது கை பகுதியில் உள்ள தசைகளோ அல்லது கால் பகுதிகளில் உள்ள தசைகளோ கிடையாது , நாக்குதான் வலிமையான தசைபகுதி  ஏனெனில் இதுதான் நம் உடலிலேயே புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே தசை அதுமட்டுமின்றி பாக்டீரியாக்களை அழிக்கும் நாம் தூங்கும் பொழுது நம் வாயில் சுரக்கும் உமிழ் நீரை வெளியே விடாமல் வாய்குள்ளேயே வைத்திருக்கவும் உதவுகிறது. அதுமட்டுமால்லாமல் நாம என்னதான் சூடான , காரமான, குளிர்ச்சியான உணவுகளை எடுத்துகொண்டாலும் நாக்கிற்கு பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவதில்லை.

 

2. வித்தியாசமாக தூங்கும் விலங்கு 

dolphin

இந்த உலகில் வித்தியாசமாக தூங்கும் பண்பு கொண்ட ஒரு விலங்கு டால்பின்கள், இந்த டால்பின்கள் தூங்கும் போது ஒரு கண் திறந்தும் மற்றொரு கண்ணை மூடியும் வைத்துகொண்டு வித்தியாசமாக தூங்கும் திறன் பெற்றது . இதற்கான காரணம் நம்மைப்போல் இரண்டு கண்களையும் மூடி உறங்கினால் அது மூச்சு திணறி இறந்து விடும் ஏனென்றால் நம் மூளை போன்று அவற்றின் மூளை தன்னிச்சையாக செயல்படாது அப்படியே இரண்டு கண்களை மூடினால் மூளை செயலிழந்து விடும்  . அதனால் இது தூங்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டுமே தூங்க அனுமதிக்கும் வலது மூளை உறங்கினால் இடது கண் திறந்திருக்கும் இது போன்றுதான் கண்களை மாற்றி மாற்றி  தூங்கும் .

3.மேகங்களுக்கு எடை உண்டா

clouds

நாம் அனைவரும் நினைத்திருப்போம் மேகம் காற்றில் ஊர்ந்து செல்கிறது எனவே இதற்கு எடை குறைவாக இருக்கும் என்று, ஆனால் உண்மையில் ஒரு மேகத்தின் சராசரியான எடையானது 55 இலட்சம் கிலோ எடையை விட அதிகமாக இருக்கும். இதற்கான காரணம் மேகத்திற்கிடைய நீர்துளிகள் இருக்கும் இதுதான் பின்பு மழையாக பொழியும் இதனால் இதற்கு எடை அதிகமாக உள்ளது.

4. ஈர்ப்புவிசை இல்லாத இடம் 

 

கனடா நாட்டில் ஹட்சன் பே என்னும் இடத்தில் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான ஈர்ப்பு விசை இருக்கிறது இதற்கான காரணம் அங்குள்ள பனிக்கட்டி உருகியதால் பூமியின் நிறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு ஈர்ப்பு விசை குறைந்துள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

5.ஏன் பிப்ரவரியில் 29 

february 29

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வருகிறது இதன் காரணம் ஒரு வருடத்திற்கு 365.2564 நாட்கள் இந்த 2564 ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது லீப் ஆண்டில் ஒரு நாளாக மாறி பிப்ரவரி 29 ஆக வருகிறது.

 

6.மனிதனுக்கும் பறவைக்கும் இடையே போர்

great emu war
1932 இல் ஆஸ்திரேலியா இராணுவமானது  ஈமு என்று சொல்லபடும் நெருப்பு கோழியை ஒத்த பறக்காத ஒரு மிகப்பெரிய பறவையுடன்  போருக்குச் சென்றது. இந்த  ஈமு பறவை ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டது .இவை பெரும்பாலும் கூட்டத்துடன் வந்து விளைநிலங்களை  வேட்டையாடும் . ஆஸ்திரேலியாவின் கேம்பியன் மாவட்டத்தில் இந்த ஈமு பறவை  ஒரு பிரச்சினையாக மாறியது, கிட்டதட்ட  20 ஆயிரம் விவசாயிகள்  இந்த  பெரிய பறவைகளால் விவசாய பயிர்களை இழந்தனர். அந்த நாட்களில் ஆஸ்திரேலியா விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்தது. எனவே ஈமுவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு அரசாங்கம் உத்தரவிட்டது.
பத்தாயிரம் சுற்று வெடிமருந்துகளுடன் பறவைகளை துப்பாக்கியால் சுட ஒரு சிறிய இராணுவம் அனுப்பப்பட்டது. இருவருக்கும் இடையே  போர் தொடங்கியது. இராணுவ வீரர்கள் இந்த ஈமுக்களை நோக்கி  துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனால் அதில் ஒரு ஈமு பறவையை கூட அவர்களால் கொல்ல முடியவில்லை வெடிமருந்துகள் முடிந்த  பிறகு, 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈமுக்கள் இருந்தன,  எனவே இவற்றை அழிக்க அதிக செலவு ஆகும்  என்பதால்  அதனை அப்படியே ஆஸ்திரேலியா அரசு  கைவிட முடிவு செய்தது. இதுவரை வரலாற்றில்  மனிதனுக்கும் பறவைக்கும் இடையே போர் நடந்ததும் இந்த நிகழ்வுதான் அதில் பறவைகளிடம் மனிதன் தோற்கடிக்கபட்டதும் இந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான்.

7.வித்தியாசமான கண் நோய்

polycoriya
பாலிகொரிய என்ற நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு கருவிழிகள் சாதாரண மனிதர்கள் போல் இருக்காது அவர்களுக்கு விழிகள் இரண்டும் மிக வித்தியாசமாக காணப்படும் எந்த அளவுக்கு வித்தியாசமானது என்றால் அவர்களின் கருவிழிகள் இரண்டாக பிளந்து காணப்படும் இருப்பினும் இவர்களுக்கு கண்ணில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது நம் கண்களில் காண்பதைதான் அவர்களும் காண்பார்கள் அதுபோன்று இது காலப்போகில் சரியாகும் ஒரு நோயாகும்.

8.பச்சை இரத்தம் உண்மையா

green blood

நம் உடலில் வரக்கூடிய இரத்தமானது 30 அடி கடல் ஆழத்தில் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் காரணம் கடலில் 30 அடிக்கு மேல் சிகப்பு நிற ஒலிகள் ஊடுருவி செல்வதில்லை இதன் காரணமாக நமது இரத்தமானது நம் கண்களுக்கு மட்டும்  பச்சை நிறத்தில் தெரியும். ஆனால் உண்மையில் கடலுக்கடியிலும் இரத்தம் சிகப்பாகதான் இருக்கும் நம் கண்களின் மாயை காரணமாக நமது இரத்தமானது பச்சை நிறத்தில் தோன்றுவதுபோல் தோன்றும்.

9.இறப்பே இல்லாத உயிரினம்

jellyfish

இதன் பெயர் jellyfish Turritopsis dohrnii இந்த மீனுக்கு இறப்பு என்பதே கிடையாது இதனை கடலை விட்டு வெளியே எடுக்கும் வரை இறப்பு இதற்கு இறப்பு என்பதே வரவே வராது. இருப்பினும் இதை கடலை விட்டு வெளியே எடுத்தால் உடனே இறந்துவிடும் ஏனென்றால் இதன் உடலில் 90% நீர்தான் உள்ளது இதன் காரணமாக இந்த மீன் வெயிலில் படும்போது அவற்றில் இருக்கும் நீர் நீராவியாக மாறுவதால் உடனே இறந்துவிடும்.

10.இரவே இல்லாத நாடு

nightsky
ஐரோப்பாவின் வடக்கு பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை அதாவது இரவே கிடையாது ஏனெனில் இது ஆர்டிக் பகுதிக்கு மிக அருகில் உள்ளது.இதன் காரணமாக பூமி சுழன்றாலும் கூட இதன் அட்சில் எந்தவித மாற்றமும் இருக்காது இதன் காரணமாக கோடைகாலத்திலிருந்து அந்த நாட்டில் சூரியன் 24 மணிநேரமும் காணப்படும்.
 
                                                                         நன்றி!
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *