பயம் வர காரணம் என்ன?(why do we scared)
பயத்திற்கான காரணங்கள்
இந்த பயம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு குறிப்பாக நீங்கள் தனியாக இருந்தாலோ மிக உயரத்தில் இருந்தாலோ மிகப்பெரிய சத்தத்தை கேட்டாலோ உங்களுக்கு பயம் ஏற்படும் .
இதுமட்டுமின்றி உங்களுடைய வாழ்கைகயில் மிகவும் அதிக பயத்தை ஏற்படுத்து கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அந்த சமயம் என்றும் கூறலாம்.
இந்த பயத்தில் நிறைய வகைகள் உண்டு எ.கா விலங்குகளை கண்டு அஞ்சுவது, உங்கள் எதிர்கால வாழ்க்கையை கண்டு அஞ்சுவது, நமக்கு உடலில் காயம் ஏற்படுமோ என்று அஞ்சுவது, உயரத்தை கண்டு பயப்படுவது என கூறிக்கொண்டே செல்லலாம் .
உளவியல் முறைப்படி பயம் என்பது உடனடியாக உணரக்கூடிய ஆபத்து மற்றும் மன அழுத்ததை ஏற்படுத்தகூடிய ஒரு வேதியியல் மாற்றம் என கூறுகின்றனர். நீங்கள் பயத்தை உணரும்பொழுது உங்களின் இதயம் வேகமாக துடிக்கும் , சத்தமாக கத்துவீர்கள், உடலில் அதிகமான வியர்வை வரும், வேகமாக மூச்சு விடுவீர்கள், உங்களின் கருவிழி விரியும் இவைதான் பயத்திற்கான முக்கிய அறிகுறிகள் ஆகும் .
இந்த பயத்திற்கு மற்றொரு காரணமாக கூறப்படுவது நம் மூளையில் இருக்கூடிய உணர்வு செயலிகள். ஒரு விலங்காலோ அல்லது ஒரு பொருளாலோ நமக்கு ஆபத்து என தெரிந்தால் நமது மூளை இந்த உணர்ச்சிகளை தூண்டும் இதன் காரணமாக நமக்கு பயம் ஏற்பட்டு நம்மை பாதுகாக்க தேவையான முயற்சிகளை எடுப்போம். அதுவே நமக்கு அது உணர்ச்சி நரம்புகள் இல்லையென்றால் நம்க்கு பயம் ஏற்படாது இதனால் நம் உயிருக்கு ஆபத்து என தெரிந்தும் அந்த ஒரு விஷயத்தை செய்வோம் இதனால் தான் இந்த உணர்ச்சி நரம்புகள் பயத்தை ஏற்படுத்துகின்றன.இந்த உணர்ச்சிகளை நம் மூளையில் ஏற்படுத்தகூடிய அமிக்டலா, ஹைபொதாலம்,தாலமஸ்,சென்சரி கோர்டெக்ஸ்,ஹிப்போ கேம்பஸ் ஆகிய 5 பகுதிகள்தான் நமக்கு பயம் வர முக்கிய காரணமாக உள்ளது.
பயத்தால் ஏற்படும் பின்விளைவுகள்
நீங்கள் பயப்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக உங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படவாய்ப்புள்ளது அதில் ஒருசிலவற்றை இப்போது. நாங்கள் பயப்படும்போது சோர்வு ஏற்படும் மன உளைச்சல் உண்டாகும் உங்களால் எதில் மீதும் கவனம் செலுத்த முடியாது தெளிவற்ற மனநிலையை கொண்டிருப்பீர்கள் இந்த சூழலில் எக்காரணத்தை கொண்டும் முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளாதீர்கள் அது கண்டிப்பாக சரியான பலனை தராது. அதுபோல பயம் பதற்றம் இரண்டுமே உங்கள் உடல் வலிமை மன வலிமையை குறைத்துவிடும் எனவே எதற்கு பயப்படமால் இருங்கள்.
பயத்தை நம் மூளையின் செயல்பாட்டின் காரணமாக இரண்டுவகையாக பிரிக்கலாம் ஒன்று உங்களுக்கு தற்சமயம் பயத்தை ஏற்படுத்தும் பிறகு போய்விடும் இதற்கு பெயர் LOW ROAD என குறிப்பிடுகிறார்கள், இந்த low road என்பது நீங்கள் ஒரு பேய் வீடுயோவை பார்த்தால் முதலில் பார்த்தால் முதலில் பயப்படுவீர்கள் பிறகு பயம் ஏற்படாது இதற்கு காரணம் நம் மூளையில் இருக்கும் தாலமஸ், அமிக்டலா மற்றும் ஹைப்போதாலமஸ் செயல்பாடு ஆகும். இந்த ஹைப்போ தாலமஸ் ஆனது நம் உடலில் இருக்க கூடிய அட்ரினலின் உற்பத்தியை அதிகரிக்கும் இந்த அட்ரினலின் நம் உடலில் இரத்தை வேகத்தை உயர்த்தி இதய துடிப்பையும் அதிகரிக்கும் இதானால் தான் இந்த பயம் ஏற்படிகிறது.
பயத்தை போக்கும் வழிமுறைகள்
நீங்கள் பயம் அல்லது பதட்டத்தில் இருக்கும்போது உங்களால் தெளிவாக சிந்திக்க முடியாது. எனவே நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நேரத்தை ஒதுக்கி, உடல் மற்றும் மன ரீதியாக அமைதியாக இருக்க வேண்டும்.
வீட்டை சுற்றி நடப்பதன் மூலமாகவோ, ஒரு கப் தேநீர் அருந்துவதன் மூலமாகவோ அல்லது குளிப்பதன் மூலமாகவோ 15 நிமிடங்களுக்கு கவலையிலிருந்து உங்களை திசை திருப்ப முடியும் இது உங்களுக்கு ஒரு வித புத்துணர்ச்சையை ஏற்படுத்தும்.
உங்கள் இதயம் வேகமான துடிப்பைப் பெறத் தொடங்கினால் அல்லது உள்ளங்கைகள் வியர்க்க ஆரம்பித்தால், அது சிறந்தது அல்ல.
இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் அப்படியே இருங்கள் மற்றும் உங்கள் உள்ளங்கையை உங்கள் வயிற்றில் வைத்து மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும்.இப்படி செய்யும்பொழுது உங்கள் உடல் ஒரு அமைதியான நிலைக்கு செல்லும்.
உங்கள் பயம் எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் அதை எதிர்கொண்டால், அது மங்கத் தொடங்கும். உதாரணமாக, ஒரு நாள் லிப்டில் ஏறும்போது நீங்கள் பயப்பட்டால், அடுத்த நாள் மீண்டும் லிப்டில் ஏறும்போது அந்த பயம் உங்களுக்கு இருக்காது அது குறைய தொடங்கும் எனவே உங்கள் பயத்தை தேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள் .
பயத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது எந்தவொரு சிக்கலையும் தீர்க்கும் சவால்கள் போன்றது, அதைச் சமாளிக்க நீங்கள் உங்கள் பயத்தை அடையாளம் காண வேண்டும். நீங்கள் எதைப் பற்றி பயப்படுகிறீர்கள்? என்று சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து உங்கள் எண்ணங்கள், உங்கள் மன உணர்வுகள் மற்றும் உடல் உணர்வுகளை கவனிக்கவும். உங்கள் மனதிற்கு தோன்றுவதை ஏதாவது ஒரு பேப்பரில் எழுதுங்கள், . உங்களை பயமுறுத்துவநு என்ன என்பதை தெளிவைப் பெற தினசரி நினைவாற்றல் தியானப் பயிற்சியைத் தழுவுவதைக் கவனியுங்கள். உங்களை பற்றி நீங்கள் அறியும்போது, உங்கள் அச்சங்களை எதிர்கொள்ள உங்களுக்கு நிறைய ஐடியாக்கள் கிடைக்கும்.
ஆனால் இதில் குறிப்பிட தக்க விசயம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் இந்த பயத்தை உணர்வதை விரும்பிகின்றனர். எடுத்துகாட்டாக பயத்தை ஏற்படுத்தகூடிய திரைப்படங்களை பார்ப்பது, மிகவும் உயரமான மலைகளில் மலை ஏறுவது , இரவில் தனியாக செல்வது என கூறிக்கொண்டே செல்லலாம்,